Skip to main content

3. இஸ்லாத்தில் உமர்

இதோ வந்துவிட்டது. நான் இஸ்லாத்தின் மீது  நம்பிக்கையை வெளிப்படுத்தவே இங்கு வந்திருக்கிறேன்.

நபித்தோழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உமர் அவர்களின் கையை தன் கரங்களால் பிடிக்க உமர் அவர்கள் தன் கையை நபி (ஸல்) கைகளின் மேல் வைத்து அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதராக இருக்கிறார்கள் என்று கூற 

அல்லாஹு  அக்பர்! அல்லாஹு  அக்பர். முஸ்லீம்களுக்கே உரிய  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம். இல்லமே அதிர்ந்தது.

நபி (ஸல்) உமரை கட்டித் தழுவ, பின் ஒவ்வொரு தோழராக  உமரை ஆரத்தழுவினார்கள்.

மக்காவில் இஸ்லாத்தை எற்கும் நாற்பதாவது நபர் உமர் (ரலி) அவர்கள். நபித்தோழர்கள் மட்டுமல்ல உமர் (ரலி) இஸ்லாத்தை தழவிவிட்டதை அறிந்து வானவர்கள் மகிழ்ச்சியடைந்தாக வானவர் ஜிப்ரயில் அவர்கள் இறைத்தூதரிடம் தெரிவித்தார்கள.

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இந்த தருணத்தைதான் நபி (ஸல்) அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) தன்னுடைய பிராத்தனையில் அடிக்கடி உமரை இஸ்லாத்தை தழுவச் செய்யுமாறு இறைவனிடம் இறைஞ்சிய வண்ணம்  இருப்பார்கள். இன்று! அல்லாஹ் அதை அங்கிகரித்து விட்டான்.         

இல்லாத்தை ஏற்றதுதான் தாமதம். தான் முஸ்லீமாகிவிட்டதை அறிவிக்க முதலில் உமர் (ரலி) அவர்கள் தேர்ந்தெடுத்தது தன்னுடைய மாமா           அபு ஐஹல்-னுடைய வீடு. அபு ஹலில் வீட்டின்  கதவை தட்டினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

கதவு திறக்கப்பட்டது.

உள்ளே அபு ஜஹல்.

உமர் ஆவலுடன்மாமாவே உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் முஸ்லீமாகிவிட்டேன் என்று கூறிய மறு கனம் அபுஐஹ்ல்உமரே இப்படி ஒருபோதும் பேசாதீர்கள் எனக்கு தெரியும் உன்னைப் போல் ஒருவரால் எப்போதும் இஸ்லாத்தை எற்கவே முடியாதுஎன்று பேச்சை நிறுத்தினான்.

இல்லை. ‘நான் உண்மையில் இஸ்லாத்தை எற்றுவிட்டேன் என்று உமர் (ரலி) கூற. உமரே! நீ சொல்வது மட்டும் உண்மையென்றால் அது மிக துரதிஷ்டமானதுஎன்று கோபமாக கூறியவாறு கதவை இழுத்து சாத்தினான்

 உமர் (ரலி) யோசித்தார்கள். அடுத்ததாக ஒவ்வொரு குறைஷி தலைவர்களின் விட்டுக்கும் சென்றார்கள். அபு ஜஹ்லைப்போலவே ஒவ்வொருவரும் உமர் (ரலி) அவர்களை திட்டி கதவை முகத்தில் அறைவது போல் சாத்த. அடுத்ததாக உமர் (ரலி) அவர்கள் காபாவுக்கு விரைந்தார்கள். அங்கு உமர்(ரலி) சந்தித்தது ஐமீலை. எந்த செய்தி கிடைத்தாலும் அதை மக்கா முழுவதும் பரப்புவதில் ஐமிலுக்கு அலாதி பிரியம் ஐமிலிடம் உமர்(ரலி) அவர்கள் செய்தியை தெரிவித்ததும் ஐமில் எழுந்தான் உரக்க கத்தினான்.

குறைஷிகளே! உமர் பின் அல் கத்தாப் இஸ்லாத்தை தழுவிவிட்டார். நம்முடைய முன்னோர்களின் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டார்

உமர் (ரலி) அவர்களை சுற்றி கூட்டம் கூடியது. பார்க்கிற பார்வையை ஐமில் சொல்வது உண்மை தானா? என்று கேட்பது போல் நின்றிருந்தது அக்கூட்டம்  .

உடனே உமர்! ஐமில் என்ன கூறினாரோ, அது உண்மையல்ல. நான் வழிதவறவில்லை. நான் உண்மையைக் கண்டு, இஸ்லாத்தை எற்று விட்டேன் என்றார்கள்உடனே அங்கே சூழ்ந்திருந்த குறைஷிய இளைஞர்கள் உமர் (ரலி) அவர்களை தாக்க விரைந்தார்கள்அவ்வழியாக வந்த அபுஐஹ்ல் சலசலப்பை பார்த்தவுடன் உண்மையை அறிந்து கொண்டு என்னுடைய மருமகன் உமருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்என்றான்.

என்னுடைய மாமாவே! உமர் பேச தொடங்கினார்கள்எனக்கு நிங்கள் பொறுப்பேற்க்க தேவையில்லை. என்னைப் பாதுகாப்பதற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் போதுமானவர்கள்.

அதுதான் உமர் (ரலி) அவர்களின் வீரம். அடுத்ததாக உமர் (ரலி) நேரே நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்நபியேநாம் உண்மையாகவே இறைவனின் வழியில் தானே இருக்கிறோம்!

நபி (ஸல்) அவர்கள். ‘ஆம் அதிலென்ன சந்தேகம்’.

உமர் (ரலி) “பிறகு என்  நம்முடைய  தொழுகையை மறைவான இடத்தில் நடத்த வேண்டும். பொது இடத்தில் நடத்திக் கொள்ளலாமேஎன் அனுமதி கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களும் அதை ஆமோதிக்க 

உமர் (ரலி) அவர்களுடன்  ஒரு அணி ஹம்ஸா (ரலி) தலைமையில், இன்னொரு அணி இரண்டு அணிகளாக அர்க்கம் (ரலி) வீட்டிலிருந்து  கிளம்பி நேராக காபாவில் திறந்த வெளியில் தொழ துவங்கினார்கள்.

இச்சம்பவம் அங்கிருந்த குறைஷியர்களுக்கும் கோபத்தை தூண்டியது அவர்கள் தங்களுக்குள்ளேயே கூறிக்கொண்டார்கள்உமர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவுடன் இந்த முஸ்லீம்கள் குறைஷிகளுக்கெதிராக பழி தீர்த்துக் கொண்டார்கள்

தொழுகை முடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அல்-பாருக் என்ற சிறப்பு பெயரை வழங்கினார்கள்.

 உமர் (ரலி) அவர்களின் குணமே இதுதான் தனக்கு ஒன்று சரியென்று தெரிந்துவிட்டால் போதும் அதற்கு தன் உயிரைக் கொடுத்தாவது அதைசெய்ய முன் வருவார்கள்.

என்னதான் இருந்தாலும் மக்கா முஸ்லீம்களுக்கு எற்ற இடமாக கடைசி வரையிலும் இல்லை. முஸ்லீம்கள் வேறு எங்காவது சென்று நிம்மதியான சமூக வாழ்க்கையை அமைக்க இறைத்தூர்கள் முஹம்மது (ஸல்) விடம் வெகு நாட்காளாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள்ஒரு நாள் முஸ்லீம்கள் ஹிஜ்ரத் செய்ய வேண்டிய இடம் மதீனா என கனவில் காட்டப்பட்டதாக முஹம்மத நபி (ஸல்) அறிவித்தார்கள்

ஹிஜ்ரத் என்றால் இடம் பெயர்தல் என்று அர்த்தம்.ஏதோ, விட்டைக்காலி பண்ணிவிட்டு வேறு ஊருக்கு செல்வது போலல்ல அது. இணைவைப்பாளர்களுக்கு தெரியாமல் குறிப்பாக குறைஷியர்களுக்கு தெரியாமல் பிறந்த மண்ணை வீட்டை, வியாபாரத்தை, உறவை அப்படியே விட்டுவிட்டு, மதீனாவுக்கு அகதிபோல் ஒளிந்து மறைந்து செல்வது.

மதீனா மக்காபோல் அல்லாமல் முஸ்லீம்களுக்கு மிக பாதுகாப்பான இடம் தான்.

ஆனால் எதிர்காலம்? கையில் உணவு இல்லைபணம் இல்லை.என்ன வியாபாரம் செய்வதுஎப்படி பிழைப்பதுஅங்கே என்னென்ன பிரச்சனைகள் வரும் எதுவும் தெரியாது. அல்லாஹ் உத்தரவு இட்டுவிட்டான்அவ்வளவுதான். கிளம்பி விட்டார்கள்.

இதுதான் அன்றைய முஸ்லிம்களின் இறைநேசம்.

இவ்வளவு இரகசியமாக சென்ற பின்பும் சில தோழர்களை குறைஷிகள் மடக்கிப் பிடிக்கவே செய்தனர்அதை வைத்துட்டுப் போ! இதை விட்டு விட்டுட்டுப்போ! இங்கேதானே எல்லாவற்றையும் சம்பாதித்தாய்.  எல்லாவற்றையும் விட்டுட்டுப்போ!என்பார்கள். அபூஸலாமா (ரலி) வின் சம்பவமோ  இன்னும் மோசம். அவருடைய மனைவியை இது எங்கள் ஊர் பெண் என்று குடும்பத்தை பிரித்தவிட்டனர்.

இவையெல்லாம் ஒரு புறமிருக்கு கையில் வாளை ஏந்திக் கொண்டு தைரியமாக காபாவிற்கு சென்று அங்கே தொழுதுவிட்டு தான் ஹிஜ்ரத் செய்யப் போவதை வெளிப்படையாக அறிவித்த ஒரே நபித்தோழர் உமர்(ரலி) மட்டுமே. எவனொருவன் தன் தாய் தனக்காக ஒப்பாரி  வைப்பதையும்  தன் குழந்தை அநாதையாவதையும் விரும்புகிறாரோ அவர் என்னை தடுத்துப் பார்க்கட்டும் என்று சூளுரைத்தவிட்டு தன் செல்வங்களை பகிரங்கமாக எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.     உமர் (ரலி) அவர்களுடன் இருபது நபித் தோழர்கள் பின் தொடர்ந்தார்கள்.

அய்யாஷ் (ரலி) -ம் ஹிஷாம் (ரலி)-யும் உமர் (ரலி)-வுடைய குழுவை மக்காவிலிருந்து பத்து மைல் தொலைவிலுள்ள பஜி கிபாரின் மரத்தின் கீழ் சந்திப்பதாக திட்டம். விடிவதற்குள் இருவரில் ஒருவர் வராமல் போனால் கூட, யாரோ  குறைஷியர்கள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள்  என்பதாய் புரிந்து கொள்ள வேண்டும்.

திட்டமிட்டபடி அய்யாஷ் (ரலி) அவர்கள்  மரத்தை  அடைந்து விட்டார்கள். ஹிஷாமோ (ரலி) வரவில்லை வேறு என்ன காரணம் இருக்கு முடியும்குறைஷியர்கள் தங்கள் வேலையை காட்டிவிட்டார்கள்.  ஹிஷாமை சிறை பிடிக்கப்பட்டார்..  இருவரும் காத்திருந்து பார்த்துவிட்டு பின் மதீனாவை நோக்கி கிளம்பினார்கள். ஒரு வழியாக கூபாவை நெருக்கியதும் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டு அபுஐஹ்ல் நேரே அய்யாஷ் (ரலி)யிடம் வந்தான்.

அய்யாஷே! நீ இங்கே வந்து விட்டாய். அங்கே உன் தாயோ நீ வரும் வரை  தன்னுடைய கூந்தலை வாரிக் கொள்ளமாட்டேன் என்றும் வெயிலிலே நிற்கப் போவதாகவும் சபதமெடுத்துக் கொண்டுள்ளார் என்று கூறினான்

அய்யாஷ் (ரலி)-க்கு உலுக்கிப்போட்டதுஇது தான் ஹிஜ்ரதின் வலி ஒரு பக்கம் இறைவனின் கட்டளை மறு பக்கம் தாயுடனான பிரிவு உமர் (ரலி) புரிந்து கொண்டார்கள் அபுஐஹ்லின் நோக்கம் என்னவென்று. அய்யஷே!உம் தாய் தலையிலுள்ள பேன், பொடுகு தொல்லை தாங்காமல் தலையை வாரிக் கொண்டே ஆக வேண்டும்வெயிலிலும் அதிக நேரம் யாராலும் நிற்க முடியாது எனவே உம் தாய் வெகுசீக்கிரம் தம் முடிவை மாற்றிக் கொள்வார்கள்மனம் கலங்காதீர் என்று தேற்றினார்கள்..

அதற்கு அய்யாஷ் (ரலி) அவர்களோ தான் மக்காவுக்கு சென்றவுடன் திரும்பிவிடுவதாகவும் மக்காவில் தனக்கு வரவேண்டிய மீத பணத்தை வசூலித்திவிட்டு தாயையும் சமாதானம் செய்துவிட்டு வருவதாகவும் கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களும் விடுவதாக இல்லைஅய்யாஷே! உமக்கு தெரியும் குறைஷிய பணக்காரர்களின் நானும் ஒருவன் என்னுடைய செல்வத்தில் பாதி அளவை உமக்கு பிரித்து தருகிறேன் என்றார்கள்.

அதற்கும் அய்யாஷ் தயங்கினார்கள். தாய் பாசம் அவரை மக்காவிற்கு இழுத்தது அடுத்து உமர்(ரலி) அவர்கள்அய்யாஷே! சரி அவ்வாறு நீங்கள் சென்று தான் ஆகவேண்டும் என்று விரும்பினால் இதோ என்னுடைய இந்த ஒட்டகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது நன்கு பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. ஏதாவது சிக்கலில் நீங்கள் மாட்டிக் கொண்டால், ஒருபோதும் கீழே இறங்கிவிடாதீர்கள். உங்களை இவ்ஒட்டகம் எளிமையாக தப்பித்து கொண்டு வந்தவிடும் என்று கூறி தம் ஒட்டகத்தை கொடுத்தனுப்பினார்கள்.

 ஆனால், அபுஜஹல்  வழியிலேயே தன் ஒட்டகத்தில் பயணம் செய்ய முடியவில்லை என்றும் அய்யாஷ் (ரலி) அவருடைய ஒட்டகத்திற்கு தான் மாற வேண்டும் என்று பொய் சொல்லி அவரை ஏமாற்றி ஒட்டகத்தை கீழே அவரவைத்து அய்யாஷ் (ரலி)-யை கயிற்றால் கட்டிவிட்டான்.

 

அய்யாஷி (ரலி)-யும் ஹிஷாமு (ரலி)-ம் மாட்டிக்கொண்டதை கேள்விப்பட்டு அல் வலீத் (ரலி) அவர்கள் இருவரையும் காப்பாற்ற அனுப்பப்பட்டார்கள் அல் வலித் (ரலி) இரவில் சுவறேறிக்குதித்து இருவரையும் பத்திரமாக காப்பாற்றினார்கள்.

பயணமும் தொடங்கியது.

மதீனாவிற்கு வெளியே உள்ள இடமான கூபாவிலேயே உமர் (ரலி) அவர்களும் அவருடன் இருபது தோழர்களும் தங்கி இருந்தார்கள். இன்னும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மற்றும் அபுபக்கரும் வரவில்லைதினமும் கூபாவிலேயே தொழுதுவிட்டு இருவரின் வருகைக்காகவும் வெளியே சென்று காத்திருப்பார்கள் அல்லாஹிவின் கருணையால் ஒரு நாள் இருவரும் வர, எல்லோரும் அவர்களை கட்டியணைத்து வரவேற்றார்கள்பின் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூபாவில் சில நாட்கள் தங்கி அங்கேயே  தொழுகையையும் நடத்திவிட்டு பின் அனைவரோடும் மதீனாவுக்கு நுழைந்தார்கள்.

மதீனா-மக்காவின் தட்பவெட்பத்துக்கு நேர் எதிரானது. கடுமையான குளிர் கடும் பனி மக்காவிலிருந்து வந்திருந்த பல தோழர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்.; பலருக்கு உடல் நலம் குன்றியது ஆனால் இவற்றிக்கு அகப்படாமல் தப்பித்து ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் உமர்(ரலி) ஆவார். இந்த சூழ்நிலையில் அடுத்ததாக ஒரு பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது 

அது வாழ்வாதாரம். சம்பாதித்தே ஆக வேண்டும் மக்காவில் இயல்பாகவோ உமர் (ரலி) அவர்கள் ஒரு சிறந்த வணிகர். ஆனால், மதினா கிளம்பும் போது முடிந்ததை எடுத்துக் கொண்டு மீதத்தை அங்கே விட்டு விட்டு வந்து விட்டார்கள்.

நபி (ஸல்) மதினா வந்ததும் ஏற்கனவே மதினாவில் வசித்து வரும் முஸ்ஸீம்களை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்திருக்கும் தோழர்களுடன் ஒருவருக்கு ஒருவர் என்று ரீதியில் துiனகளாக நியமித்தார்கள் இந்த பினைப்பு எதற்கெனில்,  ஒன்று இஸ்லாமிய சகோதரத்துவம் வளரவும்,  இன்னொன்று வணிகம், தங்குமிடம், உணவு போன்றவற்றில் மதினத்து அன்சார்கள் மக்கத்து முஹாஜிர்களுக்கு உதவியாக இருக்கவுமே. இந்த இஸ்லாமிய சகோதரத்துவம் பிற்காலத்தில் இரத்த உறவின் பினைப்புகளை  மிகைத்து நின்றது. அவ்வாறு. உமர் (ரலி) அவர்களுக்கு தோழராக அமைந்தவர் இத்பான்  (ரலி) அவர்கள்.

ஆக மதினாவில் ஒர் புதிய வாழ்க்கை துவங்கியது மக்காவைப் போல் இங்கு யாரும் ஒர் இறைவனை வணங்காதே நபி (ஸல்)-யை பின்பற்றாதே என்று மிரட்டப்போவதுமில்லை துன்புறுத்தப் போவதுமில்லை பயந்து பயந்து இஸ்லாத்தை பின்பற்ற வேண்டிய அவசியமுமில்லை மாறாக இங்கே இஸ்லாமிய சமுதாயம் அமைந்துவிட்டது. இங்கே இஸ்லாத்திற்காக உயிரை துறக்கவும் தயாராகவுள்ள சமுதாய அமைப்பு கட்டமைக்கப்பட்டுவிட்டது.

 

 

இறுதியாக வந்த நோக்கம் என்னவெனில் இஸ்லாமிய பிரச்சார பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது நபி(ஸல்) அவர்கள் அதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். எந்த ஒரு முக்கிய முடிவையும் அபுபக்கர் (ரலி)-மும் உமர்(ரலி)-மும் கேட்கமால் எடுக்கமாட்டார்கள் அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதை அப்படியே ஆமோதிப்பார்கள்

இதற்கிடையே மதினாவில் முஸ்லீம்களின் வழிபாட்டிற்காக முதல் பள்ளிவாசல், மஸ்ஜிதுந் நபவி கட்டப்பட்டது.


Comments

Popular posts from this blog

2.ஒரு மாற்றம்.

வாளை எடுத்து உறையில்செருகிக் கொண்டு , முஹம்மது ( ஸல் ) அவர்களைக் கொன்று விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார் . அங்கே போகிற வழியில் தன்னுடைய நண்பர் நய்ம் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் . உமரின் வேகமான நடை நெருப்பாய் சிவந்த முகம் , உறையில் வாள் , நய்ம் ஊகித்திருக்க வேண்டும் . என்ன ?, உமர் எங்கே செல்கிறீர் ? . நயம் தொடர ..... உமரிடம் இருந்து வார்த்தை தெரித்தது . ‘ முஹம்மதைக் கொல்ல , என்ன சொன்னாலும் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை ’. நய்ம் தொடர்ந்தார் . உமரே ! நீர் தனி ஆளாக   சென்று அக்காரியத்தை செய்வீர்களானால் , முஹம்மது ( ஸல் ) அவர்களின் குலம் உம்மை சும்மா விட்டு விடும் என நினைக்கீறீர்களா ?. தனி ஆளாக இதை செய்து ஒரு முழு குலத்தின் கோபத்திற்கு   ஆளாக போகிரீர்களா ?. உமருக்கு சிறிய சந்தேகம் எழும்பியது . நய்மே , நீரும் இஸ்லாத்திற்கு மாறி விட்டீரோ ?. உடனே நய்ம் கொஞ்சம் சுதாரித்தவராக , என்னைப் பற்றி நீர் யோசித்துக் கொண்டிருக்கீறீர்கள் , ஆனால் , உமக்கொன்ற