Skip to main content

4. அங்கிகரிக்கப்பட்ட ஆலோசனை

குறைஷியர்களோ தங்களின் இடையூருகளை இன்னும் குறைத்துக் கொள்வதாக இல்லை.  முடிந்தவரை எந்த விதத்திலாவது இடர் செய்தும் மக்காவிற்கு வரும் முஸ்லீம்களை துன்புறுத்துவதுமாய் இருந்தனர் மேலும் முஸ்லீம்களை வேரறுக்க பல்வேறு திட்டங்களை   தீட்டிக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக முஸ்லீம்களை இல்லாமலாக்கி விடவேண்டுமென்று படையோடு மதீனா வந்தடைந்தார்கள்.  

போர் மேகம் சூழ்ந்தது.

வரலாற்று சிறப்புமிக்க பத்ர் எனும் இடத்தில் நடந்த 313 நபிதோழர்களைக் கொண்ட முஸ்லீம்களின் படை ஆயிரத்திற்கும் அதிகமான குறைஷியர்களை அல்லாஹ்வுடைய நாட்டத்தால் தோற்கடித்ததுமேலும் இப்போரில் குதிரைகளையும் மற்றும் எழுபது பணயக்கைதிகளையும் முஸ்லீம்கள் கைப்பற்றினார்கள்.

உமர் (ரலி) அவர்கள்இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு போரில் பக்கபலமாக செயல்பட்டார்கள் . இதில் இன்னதொரு விஷயம் என்னவெனில் பனு அதி குலத்தை தவிர பல குறைஹிய குலங்கள் முஸ்லீம்களுக்கெதிராக  இப்போரில்  கலந்து கொண்டார்கள்.

பனு அதி என்பது உமர் அவர்களுடைய குலமாகும். மாறாக முஸ்லீம்களுடைய படையில் பனு அதி குலத்திலிருந்து இஸ்லாத்தை எற்றிருந்தவர்கள். உமர் (ரலி) அவர்களுடைய தலைமையில் குறைஷியர்களுக்கெதிராக போரிட்டனர்.

இப்போது குறைஷியர்களின் முக்கிய தலைவர்கள் பணயக் கைதிகளாய் முஸ்லீம்களின் கையில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்பணயக் கைதிகளை என்ன செய்யலாம் என்று தோழர்களிடையே ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்

உமர் (ரலி) அவர்கள் மிக ஆக்ரோஷமான கருத்தை முன் வைத்தார்கள் ஒன்று இவர்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவ வேண்டும் இல்லையேல் வெட்டி கொல்லப்பட வேண்டும். 

அபுபக்கர் (ரலி) அவர்களோ மிக மென்மையான கருத்தை முன் வைத்தார்கள் அனைத்து பணயக்கைதிகளையும் பணயத் தொகை வாங்கிக் கொண்டு விடுவித்து விடலாம். 

இறைத்தூதர்க்கு இது சரியென்றேபட்டது. அல்லாஹ் நமக்கு வெற்றியளித்துவிட்டான் எதிரிகள் மீது நாம் கருனையே காட்டுவோம் என்று முடிவு செய்து பணயத்தொகை வாங்கிவிட்டு விடுதலை அளித்து விடலாம் என்று முடிவு செய்து விடுவிக்கபட்டார்கள்.

இந்த விஷயத்தில் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஒருவரின் கருத்தும் நேர் எதிரானது இதை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள். அல்லாஹ் இஸ்லாத்திற்காக சிலரது உள்ளங்களை பாலை விட மென்மையானதாக ஆக்கிவிடுகிறான். சிலரது உள்ளங்களை இஸ்லாத்திற்காக மிக வலிமையானதாக ஆக்கிவிடுகிறான்.

மறு நாள் உமர் (ரலி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) வீட்டில் நுழைய அங்கே முஹம்மது (ஸல்) அவர்களும் அபுபக்கர் (ரலி) அவர்களும் அமுதுகொண்டிருப்பதை கண்டார்கள். உடனே தானும் கண் கலங்கியவாறு

நபியே! (ஸல்) உம்மையும் தோழர் அபுபக்கர் அவர்களையும் அழச் செய்தது எது?

நபியவர்கள்உமரே! நீர் அழத் தேவையில்லை! இது உமக்கு பெருமகிழ்ச்சியடைய வேண்டிய தருணம் பணயக்கைதிகள் விஷயத்தில் உம்முடைய கருத்தை ஆமோதித்து எங்கள் இருவரின் கருத்தை கடிந்து அல்லாஹ் வசனம் இறக்கியுள்ளான் என்று கூறி இறங்கிய திருமறை வசனத்தை ஒதினார்கள். 

பூமியில் இரத்தத்தை  ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை நீங்கள் இவ்வுலகத்தின் பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான் அல்லாஹ்மிகைத்தோனும் ஞானமுடையோனுமாவான்

உமர் (ரலி) ஒரு கருத்தை சொல்ல அல்லாஹ் அதை அங்கிகரித்தே விட்டான்.


Comments

Popular posts from this blog

2.ஒரு மாற்றம்.

வாளை எடுத்து உறையில்செருகிக் கொண்டு , முஹம்மது ( ஸல் ) அவர்களைக் கொன்று விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார் . அங்கே போகிற வழியில் தன்னுடைய நண்பர் நய்ம் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் . உமரின் வேகமான நடை நெருப்பாய் சிவந்த முகம் , உறையில் வாள் , நய்ம் ஊகித்திருக்க வேண்டும் . என்ன ?, உமர் எங்கே செல்கிறீர் ? . நயம் தொடர ..... உமரிடம் இருந்து வார்த்தை தெரித்தது . ‘ முஹம்மதைக் கொல்ல , என்ன சொன்னாலும் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை ’. நய்ம் தொடர்ந்தார் . உமரே ! நீர் தனி ஆளாக   சென்று அக்காரியத்தை செய்வீர்களானால் , முஹம்மது ( ஸல் ) அவர்களின் குலம் உம்மை சும்மா விட்டு விடும் என நினைக்கீறீர்களா ?. தனி ஆளாக இதை செய்து ஒரு முழு குலத்தின் கோபத்திற்கு   ஆளாக போகிரீர்களா ?. உமருக்கு சிறிய சந்தேகம் எழும்பியது . நய்மே , நீரும் இஸ்லாத்திற்கு மாறி விட்டீரோ ?. உடனே நய்ம் கொஞ்சம் சுதாரித்தவராக , என்னைப் பற்றி நீர் யோசித்துக் கொண்டிருக்கீறீர்கள் , ஆனால் , உமக்கொன்ற