Skip to main content

15. உமர் பாரூக் பள்ளி

ஜெருசேலம்:-

     ஜெருசேலம், கிறிஸ்துவர்களால் நிரம்பியிருந்த நகரம். மற்ற இடம் போல் அல்ல இது மற்ற இடங்களிலும் கிறிஸ்துவர்கள் முஸ்லீம்களால் வெல்லப்பட்டிருக்கிறார்கள். அச்சமயங்களில் கிறிஸ்துவர்கள் தங்கள் ஆலயங்களில் சென்று பாதுகாப்பு கோர, முஸ்லீம்களும் அவர்களின் ஆலயங்களுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளித்துவிடுவார்கள். ஆனால் ஜெருசேலம் முஸ்லீம்களுக்கும் புனித நகரம். ஆதலால் மற்ற இடங்களில் நமக்கு பாதுகாப்பு அளித்தது போல் இங்கேயும் அளிக்க முன்வருவார்களா? என்ற பயம் நாளுக்கு நாள் அதிகமானது, கிறிஸ்துவர்களுக்கு.

அபு உபைதா (ரலி) அவர்களிடம் தங்கள் கோரிக்கையை முன் வைத்தார்கள் கிறிஸ்துவர்கள்.

நாங்கள் எங்களை சமர்ப்பிக்கிறோம். ஆனால் தங்களின் கலீபாவே இங்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

முஸ்லீம்கள் கலந்தாலோசித்தார்கள். அவர்களுக்கும், இது சரியென்றே பட்டது. ஜெருசேலம் விஷயம் கலீபாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் வெற்றியா? அலீ (ரலி) யை மதீனாவில் பொறுப்பில் அமர்த்திவிட்டு ஒரு பணியாளையும், ஒரு ஒட்டகத்தையும் கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள் உமர் (ரலி) அவர்கள்.

ஒட்டகம் சிறிது தூரத்தில் களைப்படைந்தது. எஜமான், உதவியாளனுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஒருவன் ஒட்டகத்தை ஓட்ட மற்றவர் அமர்ந்து வர வேண்டும். சிறிது தூரம் சென்றவுடன் நடப்பவர் அமர, அமர்ந்தவர் ஒட்டகத்தை நடத்த வேண்டும்.

அமீரும் முஃமினீனே! நான் ஒட்டகத்தில் அமர்ந்துவர அதைத் தாங்கள் நடத்திக் கொண்டு வர. இது எனக்கு வெட்கமாக இருக்கிறது, என்னுடைய வாய்ப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்என்று உதவியாளன் கூற

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நான் அநீதியிழைக்க விரும்பவில்லை. நாம் இஸ்லாத்திலிருக்கிறோம்என்ற பெருமையே போதுமானது என்றவாறு நடையைத் தொடர்ந்தார்கள்.

ஜெருசேலத்தை நெருங்கினார்கள். அச்சமயத்தில் உதவியாளர் ஒட்டகத்தில் அமர்ந்திருக்க உமர் (ரலி) அவர்களோ ஒட்டகத்தை நடத்திக் கொண்டு வந்தார்கள்.

அபு உபைதா (ரலி), காலீத் (ரலி), யாஸித் (ரலி) மற்றும் சில தோழர்கள் கலீபாவை வரவேற்க ஜெருசலத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். உமர் (ரலி) க்கு அவர்களின் ஆடைகளைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது இரண்டு வருடங்களில் இப்படி மாறி விட்டார்களே! இது என்ன வகையான ஆடை, பட்டு ஆடையை உடுத்தியிருக்கிறீர்களே? என சத்தம் போட துவங்கினார்கள்.

தோழர்கள் கலீபாவை கொஞ்கம் அமைதிப்படுத்தி எங்கள் தளபதியே! நாங்கள் தங்கியிருக்கும் பூமி எது தெரியுமோ? இங்கே ஆடைகள் தான் ஒருவரின் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல். ஒரு வேளை நாங்கள் சாதாரண உடையணிந்திருந்தால் மக்கள் எங்களை மதிப்பற்றவர்களாக எண்ணுவார்கள். ஆயினும் கவனியுங்கள் நாங்கள் எங்கள் ஆடைகளை பட்டுத்துணிக்கு உள்ளே உடுத்தியுள்ளோம் என்று காண்பித்தார்கள்.

இந்த பதில் கலீபாவை அமைதிப்படுத்தியது. அடுத்ததாக அமைதி ஒப்பந்தத்தை மக்கள் முன் உமர் (ரலி) அவர்கள் வாசித்தார்கள். ஜெருசேல மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். சிலுவைகளோ, ஆலயங்களோ சேதப்படுத்தப்பட மாட்டாது. அவரவர்கள் விரும்பிய மதத்தை பின்பற்றலாம். அவர்களுக்கு எத்தீமையும் செய்யப்படமாட்டாது.

நகரத்தின் கதவுகள் திறக்கப்பட்டது.

உமர் (ரலி) அவர்கள் முதலில் டேவிட் ஆலயத்திற்குச் சென்றுவிட்டு, பின் அங்கிருந்து நகரத்தின் பெரிய ஆலயத்திற்குச் சென்றார்கள். உமர் (ரலி) அவர்கள் அங்கே ஓர் ஆலயத்தில் நின்று கொண்டிருக்கும் போது மதிய தொழுகைக்கான நேரம் வந்தது. அங்குள்ள பாதிரியார், உமர் (ரலி) அவர்களை ஆலயத்திலேயே தொழுமாறு கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மறுத்து, தான் இங்கே தொழுதால் என்றாவது ஒரு நாள் முஸ்லீம்கள் கலீபா தொழுத இடம் என்று கூறி உம்மிடமிருந்து இவ்விடத்தை பிடுங்கக் கூடும் என்று கூறி ஆலயத்தின் வாசற்படிக்கு வந்து தொழுதார்கள்.

 

அதோடு மட்டுமல்லாமல் இவ்விடம் தொழுகைக்கோ அல்லது பாங்கு சொல்லும் இடமாகவோ வருங்காலத்தில் ஆக்கப்படமாட்டாது என்று வாக்குறுதியாகவும் எழுதிக் கொடுத்தார்கள்.

பின் உமர் (ரலி) அவர்கள் ஜெருசலத்தில் ஒரு பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை தெரிவித்தார்கள். அந்த பாதிரியாரிடமே பள்ளி கட்ட நல்ல இடத்தை காட்டுமாறு கூறினார்கள். அதற்கு அப்பாதிரியார் சக்ரா என்ற இடத்தை சுட்டிக்காட்டினார். அங்கே தான் இறைவன், தூதர் ஜேகோப் மற்றும் மோஸஸ்விடம் பேசியதாகவும் கூறினார்கள். அவ்விடத்திலேயே கிறிஸ்துவர்கள் யூதர்களை அவமானப்படுத்த குப்பைகளை தூக்கி எறிவார்கள் என்று கூறினார்.

உடனடியாக சக்ரா சுத்தப்படுத்தப்பட்டது. உமர் (ரலி) அவர்களும் மற்றவர்களுடன் சேர்ந்து பள்ளிவாசல் கட்டும் வேலையில் இறங்கினார்கள். பள்ளிவாசல் திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டது. கலீபாவின் நினைவாக அப்பள்ளி உமர் பாரூக் பள்ளி என்று அழைக்கப்பட்டு இன்றளவும் அங்கே காட்சியளிக்கிறது.


Comments

Popular posts from this blog

2.ஒரு மாற்றம்.

வாளை எடுத்து உறையில்செருகிக் கொண்டு , முஹம்மது ( ஸல் ) அவர்களைக் கொன்று விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார் . அங்கே போகிற வழியில் தன்னுடைய நண்பர் நய்ம் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் . உமரின் வேகமான நடை நெருப்பாய் சிவந்த முகம் , உறையில் வாள் , நய்ம் ஊகித்திருக்க வேண்டும் . என்ன ?, உமர் எங்கே செல்கிறீர் ? . நயம் தொடர ..... உமரிடம் இருந்து வார்த்தை தெரித்தது . ‘ முஹம்மதைக் கொல்ல , என்ன சொன்னாலும் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை ’. நய்ம் தொடர்ந்தார் . உமரே ! நீர் தனி ஆளாக   சென்று அக்காரியத்தை செய்வீர்களானால் , முஹம்மது ( ஸல் ) அவர்களின் குலம் உம்மை சும்மா விட்டு விடும் என நினைக்கீறீர்களா ?. தனி ஆளாக இதை செய்து ஒரு முழு குலத்தின் கோபத்திற்கு   ஆளாக போகிரீர்களா ?. உமருக்கு சிறிய சந்தேகம் எழும்பியது . நய்மே , நீரும் இஸ்லாத்திற்கு மாறி விட்டீரோ ?. உடனே நய்ம் கொஞ்சம் சுதாரித்தவராக , என்னைப் பற்றி நீர் யோசித்துக் கொண்டிருக்கீறீர்கள் , ஆனால் , உமக்கொன்ற