Skip to main content

1. அழைப்பும், எதிர்ப்பும்

உலகம் பல சரித்திர நாயகர்களையும், தலைவர்களையும் மற்றும்  போராளிகளையும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மொழி, இனம் எல்லைகள் கடந்து உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது.  அவ்வாறு போற்றப்படும் அனைத்து தலைவர்களும் தாங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஏதோ ஒரு துயரத்திற்கு ஆளானவராகவோ அல்லது மனித இனத்திற்கு இழைக்கப்படும்  பெரும் அநீதிகளுக்கு எதிராக பொங்கி எழுபவர்களாகவோ இருந்துள்ளனர்

 ஆனால் இஸ்லாத்திற்கு மட்டுமே இது விதிவிலக்கு.  இந்தக் கொள்கையை யார்  ஆரம்பத்தில் கண்மூடித்தனமாக  எதிர்த்தார்களோ  பின்னாட்களில் அவர்களே இந்த கொள்கையை உயிர் மூச்சாக சுவாசித்து  இருக்கிறார்கள். அப்படி சுவாசித்தவர்களில் ஒருவர்தான் உமர் அவர்கள்.

எந்த  அளவுக்கெனில் ஆரம்பத்தில் இஸ்லாமிய கொள்கை  முஹம்மது (ஸல்)  அவர்களால் முன்வைக்கப்பட்ட போது அவரைக் கொலை செய்ய  வாளேந்தி வந்தவர் தான் இந்த உமர் அவர்கள்.

பின்னாட்களில் முஹம்மது (ஸல்)  அவர்கள் உமரைப் பற்றி கூறும் போது ‘ உமர் நாவில் இறைவன் பேசுகிறான்’ என்று குறிப்பிடுகிறார்கள்.  இதன் அர்த்தம் இறைவன் நாடினால் உமரின் வரலாறைப்  படித்து முடிக்கும் போது அனைவருக்கும் புரிந்துவிடும்.

ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டம்,  அரேபிய பிரதேசத்தில உள்ள மக்கா நகலில்   இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய  நாற்பதாவது வயதில் ஏகத்துவப் பிரச்சாரத்தை இறைவனின்  நாட்டத்தில் துவக்குகிறார்கள்.    

முன்னோர்களின்  வழிமுறைகளிலும் , மூட நம்பிக்கைகளிலும்  ஊறி திளைத்து, மகிழ்ந்து  இருந்த அம்மக்களுக்கு, முஹம்மது (ஸல்)  அவர்களின்  இஸ்லாமிய பிரசாரம் சிந்தனை ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது..அந்த தாக்கம் இஸ்லாத்தின் பால் அவர்களை  ஈர்க்கத் தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தார்கள்.

 இஸ்லாத்தை அதிக எண்ணிக்கையில் மக்கள் ஏற்காத காலம் அது. இருந்தும்  நம் இறைவன் ஒரே இறைவன் தான்.  அவனின் முன் அனைவரும் சமம் என்ற முஹம்மது இஸ்லாத்தை அவர்களின்  ஒற்றை பிரச்சாரம் அரபிய பெரும் தலைவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை  ஏற்படுத்திவிட்டது. அவர்களின் கவலையெல்லாம், இம்மக்கள்  இறைவனின் அடிமை என்று கூறி நம்மிடமிருந்து சுதந்திரம் பெற்று விடுவார்கள் என்பதுதான்.

 இதை இப்படியே விட்டு வைக்கக்கூடாது ஒவ்வொரு குல  தலைகளும் அவர்கள் அதிகாரத்திற்கு ஏற்ப இப்பிரச்சாரத்தை ஒடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

     அவர்களில் உமரும் ஒருவர். ஆனால், அவரிடம் பெரிய திட்டமெல்லாம் ஒன்றும் இல்லை. இப்பிரசாரத்தை தடுக்க ஒரே வழி, இது ஆரம்ப கட்டத்திலேயே முடக்கி விட வேண்டியது தான்.

         ஆம்! முஹம்மது தானே இப்பிரச்சாரத்தை மேற் கொள்கிறார். அவரை கொன்று விட வேண்டியதுதான். உண்மையில் அந்த தைரியம் அவருக்கு மட்டும் தான் உண்டு. அவர் அப்படி செய்தால் கூட மதினாவில்  பெரிய சலசலப்பும் இருக்காது. 

என்னதான் இஸ்லாம் உமரின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அவருடைய கோபம் எல்லாவற்றையும் மிகைத்து விட்டது.


Comments

Popular posts from this blog

2.ஒரு மாற்றம்.

வாளை எடுத்து உறையில்செருகிக் கொண்டு , முஹம்மது ( ஸல் ) அவர்களைக் கொன்று விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார் . அங்கே போகிற வழியில் தன்னுடைய நண்பர் நய்ம் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார் . உமரின் வேகமான நடை நெருப்பாய் சிவந்த முகம் , உறையில் வாள் , நய்ம் ஊகித்திருக்க வேண்டும் . என்ன ?, உமர் எங்கே செல்கிறீர் ? . நயம் தொடர ..... உமரிடம் இருந்து வார்த்தை தெரித்தது . ‘ முஹம்மதைக் கொல்ல , என்ன சொன்னாலும் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை ’. நய்ம் தொடர்ந்தார் . உமரே ! நீர் தனி ஆளாக   சென்று அக்காரியத்தை செய்வீர்களானால் , முஹம்மது ( ஸல் ) அவர்களின் குலம் உம்மை சும்மா விட்டு விடும் என நினைக்கீறீர்களா ?. தனி ஆளாக இதை செய்து ஒரு முழு குலத்தின் கோபத்திற்கு   ஆளாக போகிரீர்களா ?. உமருக்கு சிறிய சந்தேகம் எழும்பியது . நய்மே , நீரும் இஸ்லாத்திற்கு மாறி விட்டீரோ ?. உடனே நய்ம் கொஞ்சம் சுதாரித்தவராக , என்னைப் பற்றி நீர் யோசித்துக் கொண்டிருக்கீறீர்கள் , ஆனால் , உமக்கொன்ற