Skip to main content

2.ஒரு மாற்றம்.

வாளை எடுத்து உறையில்செருகிக் கொண்டு, முஹம்மது (ஸல்) அவர்களைக் கொன்று விட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

அங்கே போகிற வழியில் தன்னுடைய நண்பர் நய்ம் அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.உமரின் வேகமான நடை நெருப்பாய் சிவந்த முகம், உறையில் வாள், நய்ம் ஊகித்திருக்க வேண்டும்.

என்ன?, உமர் எங்கே செல்கிறீர்?. நயம் தொடர.....

உமரிடம் இருந்து வார்த்தை தெரித்தது. ‘முஹம்மதைக் கொல்ல, என்ன சொன்னாலும் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை நிறுத்துவது போல் தெரியவில்லை’.

நய்ம் தொடர்ந்தார். உமரே! நீர் தனி ஆளாக  சென்று அக்காரியத்தை செய்வீர்களானால்,முஹம்மது (ஸல்) அவர்களின் குலம் உம்மை சும்மா விட்டு விடும் என நினைக்கீறீர்களா?.தனி ஆளாக இதை செய்து ஒரு முழு குலத்தின் கோபத்திற்கு  ஆளாக போகிரீர்களா?.

உமருக்கு சிறிய சந்தேகம் எழும்பியது.

நய்மே, நீரும் இஸ்லாத்திற்கு மாறி விட்டீரோ?.

உடனே நய்ம் கொஞ்சம் சுதாரித்தவராக, என்னைப் பற்றி நீர் யோசித்துக் கொண்டிருக்கீறீர்கள், ஆனால்,உமக்கொன்று தெரியுமா?, உம்முடைய தங்கையும் அவருடைய கணவரும் இஸ்லாத்தை தழுவி விட்டார்கள்.

உமருக்கு துக்கத்திற்கு மேல் துக்கம்.

இதுவரை தன்னுடைய தங்கையும் அவரின் கணவரும் இஸ்லாத்தைப் பற்றி ஏதாவது அறிந்து இருப்பார்கள் என்று கூட அவர் நினைத்துப் பார்த்ததில்லை. அதே கோபத்துடன் அவ்விடத்தை விட்டு நகர்த்தார்கள், இறைதூதர் இருக்கும் இடத்திற்கு அல்ல. இம்முறை தன் தங்கை வீட்டிற்கு.

 

நய்ம் அவர்களுக்கு மகிழ்ச்சி

எப்படியோ இறைதூதரை கொல்ல வந்த அவரை ஒரு வழியாக இறைவனின் நாட்டத்தால் திருப்பி அனுப்பியாயிற்று. நய்மிற்கு தெரியும் உமர் தன் தங்கையை கொல்ல முன் வர மாட்டார். அவர் தன தங்கை மேல் வைத்திருந்த பாசம் அப்படி.

இன்னொரு விஷயம்!

உமர் சந்தேகித்தது போல்சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியிருந்தவர்களில் நய்மும் ஒருவர்.

நய்ம் சொல்லியது உண்மைதான் உமர் வீட்டினுள் நுழைய தங்கை பாத்திமாவும் அவரது கணவர் ஜைதும் கையில் இருந்த இலையை மறைத்தவாறு  இன்முகத்துடன் உமர் அவர்களை வரவேற்றார்கள்.ஆனால், உமர் அவர்களோநேரே சென்று ஜைதின் கழுத்தை இறுக்கிபிடித்து நெரித்தவாறு  நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டீர்களா? நம் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டு விட்டீர்களா? என்று கோபமாக கேட்கஅருகில் நின்றிருந்த பாத்திமா அவர்களோ உமர் அவர்களை தடுத்துஉமரே! எதுவாயினும் என்னிடம் கேள். ஆம் நாங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டோம்.” என்றார்கள்.

உமர் அவர்களிடம் இப்படி தைரியமாக சொல்ல பாத்திமாவினால் மட்டுமே முடியும்.

உமருக்கு இயலாமையும் கோபமும் கை கோர்த்து நின்றது.என்னதான் முஸ்லீம்களுக்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருந்தாலும். அம்முஸ்லீம்களின்  உறுதி உமரை அதிகம் யோசிக்கவே வைத்தது. தன்னுடைய பிடிவாதமும் முன்னோர்களின் மார்க்கத்தின் மேல் கொண்ட பற்றுமே இஸ்லாத்தைப்பற்றி அதிகம் யோசிப்பதை தடை செய்து கொண்டிருந்தது. ஆனால் இதற்கெல்லாம் முடிவு கட்டும் நேரமும் நெருங்கிவிட்டது..

உமர் தொடர்ந்தார்பாத்திமாவே நான் வரும்போது ஒரு இலையை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாயே அது என்ன?அதைக்கொடு என்னிடம்என்றார்கள்.

அது குர் ஆனின் வசனங்கள். அதை நீங்கள் தொட வேண்டுமென்றால் முதலில் உங்களை  பரிசுத்தப்படுத்தி விட்டு வாருங்கள்என்றார்கள்., உமரின் அன்புத் தங்கை.

உமர் அவர்களுக்கு ஆவல் அப்படி என்னதான் இவர்களை கவர்ந்திருக்கிறது பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றியதுஉடனே தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அந்த இலையை வாங்கினார்கள். இலையில், சில குர்ஆன் வசனங்களை எழுதப்பட்டிருந்ததுஇந்தக் காலகட்டத்தில் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் அருளப்பெறும் போதெல்லாம் அதை சுற்றிருக்கும் இஸ்லாமிய தோழர்கள், தோல் பட்டையிலோ, வீட்டுக்கூரையிலோ அல்லது மரத்தின் காய்ந்த இலையிலோ எழுதிக் கொள்வார்கள். அந்த இலையின் எழுதப்பட்டிருந்த குர்ஆன் வசனங்களை உமர் அவர்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள் வசனம் இப்படி ஆரம்பித்தது.

தாஹா

(நபியே) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.

அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி வேறில்லை பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கியருளப்பெற்றது.

அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான். வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும். இவ்விரண்டிற்கு இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.

நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும், மறைவானதையும் அறிகிறான் 

அல்லாஹ்-அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன(20-1-8)

ஒரு முறை அல்ல. பலமுறை திரும்ப திரும்ப வாசித்தார்கள். இது தான் இறைவனின் வார்த்தைகளா! இதைத்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் போதித்து வந்தார்களா! இது தான் இஸ்லாமா! எவ்வளவு பெரிய உண்மை! என்னுடன் பேசுவது போலல்லவா இருக்கிறதுஇதையா நான் எதிர்த்து வந்தேன். எங்கே முஹம்மது (ஸல்)?. நான் அவரைக் காண வேண்டும். அவரைக் கொல்ல வாளை ஏந்தி வந்த நான் அவரிடம் சரணாகதியடையப் போகிறேன்பாத்திமாவே என்னைக் கூட்டிச் சொல்லுங்கள் நபி (ஸல்)யிடம்.

உமர் அவர்கள் இறைதூதர் இருக்கும் இடமான அர்க்கம் (ரழி) வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கான போதனை இரகசியமாக நடந்து கொண்டிருக்கும்அர்க்கம் (ரலி) வீட்டின் கதவு தட்டப்பட்டதுஇரகசியமாக நடக்கும் கூட்டம் அல்லவாஉள்ளிருந்து நபித்தோழர் ஒருவர் கதவின் துவாரம் வழியாக  எட்டிப் பார்த்தார்

வெளியே உரையில் வாளுடன் உமர் அவர்கள்.,

கொஞ்சம் பின்வாங்கினார் நபித்தோழர்.

உள்ளிருந்தவாரே! கேட்டார்.யார் வெளியே?’

பதில் தெறித்தது. ‘உமர்! உமர் பின் அல் கத்தாப்.

உள்ளிருந்த நபித்தோழர்கள் மத்தியில் நிசப்தம். உமருக்கு இவ்விடம் எப்படித் தெரிந்தது. உமருக்கு தெரிந்தால் மக்கத்து குறைஷியர்களுக்கு தெரிந்தது போல் அல்லவா! இந்த இரகசிய இடத்தை யார் காட்டிக்கொடுத்தது?.

நபித் தோழர்களுக்கு கதவை திறப்பதில் கொஞசம் அச்சம் ஹம்ஸா (ரலி) சொன்னார்கள்தைரியமாக கதவை திறங்கள் உமர் அமைதியுடன் வந்தால், நாமும் அமைதியை பரிசளிப்போம். அவர் வேற நோக்கத்தில் வந்திருப்பாரேயானால், அவரை எதிர்கொள்ள நம்மிடம் இருப்பவர்களே போதுமானவர்கள்”  என்று தைரியப்படுத்தினார்கதவு திறக்கப்பட்டது உள்ளே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி எல்லோரும் கையில் வாளை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்தார்கள்ஒரு வேளை உமர் வாளை ஏந்தி விட்டால், பதிலளிக்க வேண்டுமே.

ஹப்ஸா (ரலி) கேட்டார்கள்உமரே உம்மை இங்கு வரவழைத்தது எதுகேட்டுக் கொண்டிருக்கும் போதே,     நபி (ஸல்) அவர்கள் உள் அறையிலிருந்து வெளியே வந்தார்கள்.  ஹம்ஸாவே! அவரை உள்ளே வரவிடுங்கள்”  என்று நபி (ஸல்) கூற உமரும் உள்ளே வந்தார்கள்.

நபி (ஸல்) பேச துவங்கினார்கள்,உமரே! இஸ்லாத்திலிருந்து எவ்வளவு நாள் இப்படி விலகியிருப்பீர்கள். இன்னும் இஸ்லாத்தைதை ஏற்கும் நேரம் வரவில்லையா?.


Comments